புத்தியம்மன் கோவில் ஆடித்திருவிழா
ADDED :3402 days ago
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை, தேவி பவானி புத்தியம்மன் கோவிலில் நடைபெற்று வரும், ஆடித் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அம்மனுக்கு கலாசாபிஷேகமும், சங்காபிஷேகமும் நடைபெற்றது. கவரைப்பேட்டையில் அமைந்துள்ள, தேவி பவானி புத்தியம்மன் கோவிலில், ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. காலையில், அம்மனுக்கு, 208 கலசங்கள் வைத்து, பூஜிக்கப்பட்டன. பூஜித்த கலசங்களை, எடுத்து கோவிலை சுற்றி, பெண்கள் வலம் வந்தனர். அதைதொடர்ந்து கலசாபிஷேகமும், 1,008, சங்காபி÷ ஷகமும் நடைபெற்றன. கவரைப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள், கலந்துகொண்டு அம்மனை தரிசி த்தனர்.