உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா

கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா

புதுச்சேரி: கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில், குருபெயர்ச்சி விழா வரும் 2ம் தேதி நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை 9.31 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து, கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனையொட்டி, கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6.00 மணிக்கு யாக பூஜையுடன் விழா துவங்குகிறது. காலை 8.00 மணிக்கு குரு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மகா அபிஷேகம், 9.31 மணிக்கு குரு பெயர்சியை யொட்டி, சிறப்பு மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !