உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷ விழா

ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷ விழா

ஈரோடு: ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆடி பிரதோஷ விழா நேற்று விமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நந்தி சிலைக்கு பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, திருமஞ்சனம், பஞ்சாமிருதம், எலுமிச்சை சாறு, பன்னீர், சந்தனம், சொர்ணம், திருநீர் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், மகாதீபாரதனை நடந்தது. விழாவின் நிறைவில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட, ரிஷப வாகனத்தில், உமா மகேஸ்வரர் பிரகாரத்தில் வலம் வந்தார். ஆடி பிரதோசம் என்பதால், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் மாவட்டத்தில் பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர், சோழீஸ்வரர், மகிமாலீஸ்வரர், சிவன் கோவில்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !