உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் ஆடிப்பூர திருக்கல்யாணம் வரும் 6ம் தேதி நடக்கிறது

விருத்தகிரீஸ்வரர் ஆடிப்பூர திருக்கல்யாணம் வரும் 6ம் தேதி நடக்கிறது

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி, விருத்தாம்பிகை அம்மன் ஆடிப்பூரத் திருக்கல்யாண உற்சவம்  நடக்கிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த 27ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.  நேற்று சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை பல்லக்கிலும், இரவு யானை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று  1ம் தேதி அபிஷேக ஆராதனை, காலை வெள்ளி ரிஷப வாகனத்திலும், இரவு கமல வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 5ம் தேதி காலை சிறப்பு அ பிஷேக ஆராதனை செய்து, தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி, இரவு விருத்தாம்பிகை அம்மன் ஸ்படிக பல்லக்கில் ஊர்வலம் நடக்கிறது. 6ம் தேதி  அதிகாலை 5:00 மணியளவில் விருத்தாம்பிகை அம்மன் ஆடிப்பூரத் திருமாங்கல்ய நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !