உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு சித்தானந்தா கோவிலில் குரு பெயர்ச்சி விழா

குரு சித்தானந்தா கோவிலில் குரு பெயர்ச்சி விழா

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் நாளை 2ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. குரு பகவான் நாளை 2ம் தேதி காலை 9.27 மணியளவில் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனசு, கும்பம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இதனையொட்டி கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2ம் தேதி காலை 6.30 மணிக்கு கலச பிரதிஷ்டையுடன் குரு பெயர்ச்சி விழா துவங்குகிறது. 7.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. 8.30 மணிக்கு குருவிற்கு மகா அபிஷேகமும், 9.27 மணிக்கு குருவிற்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. குரு பகவானின் பிரதிஷ்டை கலசம் வேண்டும் பக்தர்கள் இன்று 1ம் தேதிக்குள் ரூ.250 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், செயலாளர் வாசுதேவன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் முனுசாமி தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !