ஆடி அமாவாசையில மக்களுக்கு வசதிகள்
ADDED :3401 days ago
ராமநாதபுரம்: ஆடி பெருக்கு, அமாவாசை, குரு பெயர்ச்சி விழாக்களை முன்னிட்டு வழிபாட்டு தலங்கள் வரும் மக்களுக்கு போதிய வசதிகள் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார். அவர் கூறியிருப்பதாவது: ஆக., 2 ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டினம், சேதுக்கரை கடலில் புனித நீராட ஏராளமானோர் வருவர். வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் இடையூறின்றி வந்து செல்ல போக்குவரத்து கழகம் போதிய பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை வருவாய்த்துறை, உள்ளாட்சி அலுவலர்கள் இணைந்து நிறைவேற்ற வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை தொய்வின்றி மேற்கொள்ள மணிவண்ணன் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.