புரட்டாசி சிறப்பு பூஜை
ADDED :5234 days ago
உடுமலை : உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், புரட்டாசி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. உடுமலை அருகே கரட்டூரில், மலைமீது வீற்றிருக்கும் பழமையான சஞ்சீவராயப்பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் 1ம் தேதியையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. பின், ராம பக்தர்களால் பஜனை நிகழ்ச்சியும் நடந்தது. இது போன்று உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.