உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலப்பள்ளிப்பட்டி அண்ணமார் சுவாமி கோவில் பொங்கல் விழா

மூலப்பள்ளிப்பட்டி அண்ணமார் சுவாமி கோவில் பொங்கல் விழா

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, மூலப்பள்ளிப்பட்டி அண்ணமார் சுவாமி கோவிலில் ஆடி பெருக்கு விழா நடக்கிறது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சியில் அண்ணமார் சுவாமிகள் என்று அழைக்கப்படும் பொன்னர், சங்கர், தங்காயி, பெரியகாண்டியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, பொங்கல் விழா ஆடிப்பெருக்கு நாளில் தொடங்குகிறது. உற்சவர் சிலைகள், கோரையாறு சென்று அங்கிருந்து தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோவில் வந்தடையும். இரவு, 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அடுத்த நாள் நையாண்டிமேளம், வாணவேடிக்கை, புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. வரும், 4ம் தேதி, ஆடு கிடா பலியிட்டு, பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !