ஆடிப்பெருக்கு: திருச்சி அம்மா மண்டபத்தில் நீராட குவிந்தனர் பக்தர்கள்!
ADDED :3401 days ago
திருச்சி: ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி திருச்சி– ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துறையில் நீராட பக்தர்கள் குவிந்தனர்.
காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள், ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஸ்ரீரங்கம் அருகே அம்மா மண்டப்பத்தில் இன்று,ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் குவிய துவங்கினர். ஆடி பெருக்கு தினமான இன்று, திருமணமாகாத கன்னி பெண்கள், சிறப்பு வழிபாடு நடத்தி, நல்ல கணவன் அமையவும், திருமணமான பெண்கள், தாலி மாற்றி புது தாலி கட்டிக்கொள்வது இங்கு விசேஷம்.