உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டை குரு கோயிலில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்!

திட்டை குரு கோயிலில் குரு பெயர்ச்சி விழா கோலாகலம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேசுவரர் கோயில்.  இந்த ஆண்டு குரு பகவான் இன்று சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு 9.33 மணிக்கு பிரவேசிக்கம் செய்தார். தீபாராதனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.

இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாடெங்கும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.  இக்கோயிலில் இறைவன் தானாகத் தோன்றியதால் தான் தோன்றீசுவரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்ததால், இத்தல இறைவன் வசிஷ்டேசுவரர் என அழைக்கப்பட்டார். இக்கோயிலில் மூலவர் வசிஷ்டேசுவரர் சன்னதியின் விமானம் சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்தக் கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதி வினை ஏற்பட்டு 24 நிமிஷங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகிறது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவன் கோயிலிலும் காண முடியாது. அனைத்து சிவன் கோயில்களிலும் தென் கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவான ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை குருவாகப் பாவித்து வழிபடப்படுகிறார். ஆனால், திட்டை வசிஷ்டேசுவரர் கோயிலில் நவக்கிரக குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த சிவன் கோயிலிலும் இல்லை. இதனால், பல வெளிநாடுகளில் வாழும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பரிகார ஹோமங்கள் செய்து குரு பகவானை வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு குரு பகவான் இன்று சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு 9.33 மணிக்கு பிரவேசிக்கம் செய்தார். தீபராதனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரத்திறக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர். இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக திட்டை வசிஷ்டேசுவரர் கோயிலில் ஆக. 8-ம் தேதி ஏக தின லட்சார்ச்சனை நடைபெறும். இதற்கு கட்டணம் ரூ. 300. இக்கோயிலில் தோஷங்கள் நீங்க பரிகார ஹோமங்கள் செய்து வழிபடுவது வெகு சிறப்பு.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் திட்டைக்கு வந்து குரு பகவானுக்கு பரிகார ஹோமங்கள் செய்து வழிபட்டுச் செல்கின்றனர். வசதி உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் இங்கு வந்து ஹோமங்கள் செய்து வழிபடலாம். இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆக. 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 3 நாள்கள் தொடர்ந்து பரிகார ஹோமங்கள் வேத விற்பன்னர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளன. வேறு வெளி இடங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொள்வதை விட குரு பகவான் சன்னதியில் நடைபெறும் இந்த ஹோமங்களில் பங்கு கொள்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். இந்த ஹோமங்களில் நேரில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம், அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு கட்டணம் ரூ. 500.

லட்சார்ச்சனை மற்றும் குரு பரிகார ஹோமங்கள் நடைபெறும் நாள்களில் நேரில் வருபவர்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி அவற்றில் பங்கு கொள்ளலாம். நேரில் வர முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு ரூ. 300, ஹோமத்துக்கு ரூ. 500 பணவிடை அல்லது கேட்பு வரைவோலையை தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை தங்களுடைய சரியான முகவரியுடன் ஆக. 17-ம் தேதிக்குள் அனுப்பினால் அவர்களுக்கு அர்ச்சனை அல்லது சங்கல்பம் செய்து அஞ்சல் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அத்துடன் பூஜையில் வைத்த குரு பகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் மற்றும் குரு பகவான் படம் அனுப்பி வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !