உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி வழிபாடு

ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி வழிபாடு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில், உலக நன்மை வேண்டி, முளைப்பாரி வழிபாடு நடந்தது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், குடும்பங்கள் செழிக்கவும், முளைப்பாரி மற்றும் பொங்கல் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி, 150 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், கடந்த ௨௨ம் தேதி நெல் விதைத்து, 9 நாட்களாக விரதம் இருந்து, 9ம் நாளான நேற்று, முளைப்பாரியுடன் ஸ்ரீசாரதா ஆசிரமத்திற்கு வந்தனர். அங்கு பொங்கல் வைத்து, வழிபாடு செய்தனர். ஆசிரமத்தில் ஸ்ரீசாரதா அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆசிரமத்தின் தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா, குத்துவிளக்கேற்றி வைத்து, தீபாராதனை செய்தார். சென்னை எம்.எம்., பார்ஜின்ஸ் நிறுவன துணைத் தலைவர்  வித்யாசங்கர்கிருஷ்ணன், சுமித்தாவித்யாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து, சேவா பிரதிஷ்டான் இயக்குநர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா, முளைப்பாரியை பெண் பக்தர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் 150 கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !