உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டாள் ஆடிபூர மகோத்சவம்!

உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டாள் ஆடிபூர மகோத்சவம்!

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டாள் ஆடிபூர மகோத்சவ விழா, கடந்த 30ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 5:30 மணிக்கு, மூலவர் திருவிக்ரமன் விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை 8:40 மணிக்கு ஆண்டாள் ஆஸ்தானத்தில் இருந்து பாதம் தாங்கிகளில் புறப்பட்டு, ராமானுஜர் சேனைமுதலிகள் மனவாளமாமுனிகள் பிள்ளைலோகாச்சாரியர் சன்னதிகளில் மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் நடந்தது. பகல் 12:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுக்கு தீபாராதனை சாற்றுமறை 1:10 மணிக்கு சுவாமி புறப்பாடாகி, மூலஸ்தானம் எழுந்தருளினார்.   ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த, இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !