சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED :3402 days ago
கீழக்கரை: ஏர்வாடி, முத்தரையர் நகர் மச்சவதார சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஜூன் 16ல் கும்பாபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேக பூஜை நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. பூர்ணாகுதி, யாகசாலை பூஜைகளில் வேதமந்திரங்கள் முழங்கப்பட்டன. கல்யாண கணபதி, சுப்பிரமணிய சுவாமி, ஈசானாதி பஞ்சலிங்கம், திருநீற்று சித்தர் ஆகிய தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை ராமலிங்க குருக்கள் செய்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி பரமாத்மா ராமநாதன் செய்திருந்தார். மாலையில் நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.