வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை
ADDED :3399 days ago
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகாலையில் மஞ்சமாதாவிற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பெண்கள் நெய் தீபம் ஏற்றி, சக்தி ஸ்தோத்திரம், பஜனைகள் பாடினர். தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை வல்லபை குருசாமி மோகன் சாமி, சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.