திருப்புவனத்தில் ஆடி அமாவாசை: வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்
ADDED :3398 days ago
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தர நாயகிஅம்மன் கோயில் அமைந்துள்ளது. காசியை விட வீசம் பெரியது என போற்றப்படும் இத்தலத்தில் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் தனியார் தொட்டியில் குளித்து விட்டு பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்தனர். திதி பொருட்களை விடுவதற்கு தண்ணீர் வரத்து இல்லாததால் வெறுமையான ஆற்றில் குழி தோண்டி புதைத்தனர்.திதி,தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரச மர விநாயகரை வழிபட்டனர்.