தன்வந்திரி பீடத்தில் குரு பெயர்ச்சி விழா
ADDED :3398 days ago
வாலாஜாபேட்டை: தன்வந்திரி பீடத்தில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று குரு பெயர்ச்சி விழா நடந்தது. காலை, 9 மணிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. பின், 108 விதமான திரவியங்களுடன் சிறப்பு ஹோமம், பாலாபிஷேகம் நடந்தது. பின், உலக மக்கள் நன்மைக்காகவும், இயற்கை வளங்களுக்காகவும் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து, தட்சிணாமூர்த்திக்கு நவ கலச திரு மஞ்சனம் நடந்தது. ஆடி அமாவாசையையொட்டி, பிரந்தியங்கிரா தேவிக்கு, நிரும்பலா யாகம் நடந்தது. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.