ஆடி 18ல் தாலி பெருக்கி கட்டிய பெண்கள்
ADDED :3398 days ago
காரைக்குடி: ஆடி பெருக்கான நேற்று காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் பெண்கள், புதுமண தம்பதிகள் புத்தாடை உடுத்தி, பழம், அவல், ஊற வைத்த இனிப்பு அரிசி, புதிய மாங்கல்ய மஞ்சள் கயிறு ஆகியவற்றை ,மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் வைத்து படையல் செய்து வழிபட்டனர். தொடர்ந்து தாலி மாற்றி புது தாலி அணிந்து கொண்டனர்.
* கோவிலுார் திருநெல்லை உடனாய கொற்றவாளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தெப்பக்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதே போல் காரைக்குடி நகர சிவன்கோயில், செக்காலை சிவன் கோயில், முத்துமாரியம்மன் கோயில், பெரிய முத்துமாரியம்மன் கோயில், கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.