உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் மாவட்டத்தில் குருப்பெயர்ச்சி விழா: பக்தர்கள் வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் குருப்பெயர்ச்சி விழா: பக்தர்கள் வழிபாடு

நாமக்கல்: குருபகவான், நேற்று காலை, 9.27 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியானதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள, ஈஸ்வரன், முருகன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் கோட்டை விநாயகர் கோவிலில், நேற்று காலை, 6.30 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், சுப்ரமணியர், நவக்கிரகம் மற்றும் தட்சிணாமூர்த்தி மூலமந்திர ஹோமங்கள் நடந்தன. அதில், மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் கலந்து கொண்டு, பரிகாரம் செய்தனர. அதேபோல், மாருதிநகர் ராஜகணபதி, மோகனூர் சாலை பாலதண்டாயுதபாணி சுவாமி போன்ற கோவில்களில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது.

* மதுக்கரவேணி சமேத அசலதீபேஸ்வரர் கோவில், எஸ்.வாழவந்தி சிங்காரப்பாறையில் உள்ள நவரக்கிரக கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள ஈஸ்வரன், முருகன் கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !