உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு பெயர்ச்சியை ஒட்டி அந்தியூரில் சிறப்பு யாகம்

குரு பெயர்ச்சியை ஒட்டி அந்தியூரில் சிறப்பு யாகம்

அந்தியூர்: குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து, கன்னி ராசிக்கு நேற்று பெயர்ச்சியானார். இதையொட்டி அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில், சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் குருபகவானுக்கு மஞ்சள் உடை அணிவித்து, கொண்டை கடலை மாலை சூட்டப்பட்டது. யாகத்தில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் பழம், தானியம், பூ ஆகிய பொருள்களை யாக குண்டத்தில் போட்டு குருபகவானை வழிபட்டனர்.

* பெருந்துறை சோழீஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் நேற்று மாலை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* புன்செய்புளியம்பட்டியில் பாடல் பெற்ற தலமான, பழமையான சுப்ரமணியர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தட்சிணாமூர்த்தி சன்னதியில், குருபெயர்ச்சி விழா நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி 9:00 மணிக்கு நிறைவடைந்தது. காலை, 9.30 மணிக்கு குருபெயர்ச்சி யாகம் நடந்தது. இதேபோல், அண்ணாமலையார் கோவிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !