ஆடி அமாவாசை: பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு யாகம்!
தூத்துக்குடி: கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் பீடத்தில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு குரு பெயர்ச்சிக்காக நடந்த சிறப்பு யாகம், மற்றும் பூஜையில் பெண்கள் மட்டுமே பங்கேற்றனர். தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரத்தியங்கிரா தேவி- கால பைரவர் சித்தர் பீட கோயில் உள்ளது. இங்கு அஷ்டமி, அமாவாசைச, பவுர்ணமி, பிரேதாஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை, யாகம் நடந்தது. காலையில் கணபதி, மஹாபிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், தசசமகாவித்யா, குரு மாஹாலிங்கேஸ்வர ஹோமங்கள் நடந்தது. பகல் 11 மணிக்கு பிரத்தியங்கிரா தேவிக்கு பால், தயிர், சசந்தனம், இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மதியம் ஒரு மணிக்கு குரு மாஹா லிங்கேஸ்வரருக்கு, குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம், வழிபாடுகள் நடந்தது. பிரத்தியங்கிராதேவிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாரதனை நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின் மாலை மகாலட்சுமி யாகம் லலிதா சசகஸ்கர நாம பாராயணம், மகா தீபாரதனை நடந்தது. இந்த சிறப்பு வழிபாடுகள் அனைத்தையும் பெண்கள் மட்டுமே பங்கேற்று செசய்தனர்.