தேவகோட்டையில் குரு பெயர்ச்சி விழா
ADDED :3398 days ago
தேவகோட்டை: தேவகோட்டையில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. ராமலிங்க குருக்கள் தலைமையில் சிறப்பு யாகபூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கும், மேதா தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தன.
* ஆதிசங்கரர் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு தம்பதி சமேதகர்களாக இருக்கும் குருபகவான் உட்பட நவகிரகங்களுக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. ஆடிபெருக்கை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
* நகர சிவன் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தன. இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ,சிறப்பு பூஜைகள் நடந்தன.