உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரணாகதி தத்துவம்

சரணாகதி தத்துவம்

இறைவனிடம் அன்பு செலுத்துவதிலேயே பிரபத்தி கற்பது ஓர் உயர்ந்த நிலை என வைணவர்கள் நம்புகின்றனர். அதாவது இறைவனை முற்றிலும் சரணடைந்து விடுதல் என்பது இதன் பொருள். இந்த சரணாகதி தத்துவத்தின் அம்சங்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன. 1. இறைவனுக்கு எது விருப்பமோ அதை மட்டுமே தாமும் விரும்புதல். 2. இறைவனுக்கு விருப்ப மற்றவைகளைத் தாமும் விரும்பாமல் விலக்குதல். 3. இறைவனுடைய பாதுகாப்பு என்றும் உண்டு என்ற நிச்சயமான நம்பிக்கை கொள்ளுதல், 4. பகவானுடைய பாதுகாவலை எப்பொழுதும் வேண்டி நிற்றல். 5. தமது வாழ்க்கையை முழுமையாக இறைவனுக்கே அர்ப்பணித்தல், 6. எல்லாம் இறைவன் செயலே, தன் செயல் ஏதுமில்லை என்று முற்றிலுமாக நம்பியிருத்தல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !