இரகசிய விளக்கம்
ADDED :3750 days ago
திருமந்திரம் என்பதை அஷ்டாக்ஷ மந்திரம் எனக் கூறுவர். நம்நாராயணனுக்கு வணக்கம் என்ற கருத்தை உள்ளடக்கிய ஸ்லோகம் அது. துவ்ய மந்திரம் என்பது திருமந்திரத்துக்கு விளக்கம் தருவது போல அமைந்திருக்கிறது. ஸ்ரீமந் நாராயணன் பாதங்களை அடைக்கலமாகப் பற்றுகிறேன் என்ற கருத்தினை இது உள்ளடக்கியது. சாம ஸ்லோகம் என்பது பகவான் ஆன்மாக்களுக்கு நேரடியாகச் செய்யும் உபதேசமாக அமைந்திருக்கிறது. பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு பகவான் இறுதியாக அளித்த உபதேசமே சாம ஸ்லோகமாக அமைந்திருக்கிறது. அது இது: இறுதியாக என்னையே சரணடைந்து விடு. நான் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன்.