உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவ நெறியின் பெருமை

சைவ நெறியின் பெருமை

மற்ற எந்த சமயத்தையும் விட சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் அன்றும் சரி, இன்றும் சரி பாரத தேசத்தில் மிகவும் அதிகமாக உள்ளனர். சிவனுக்கு என அமைந்த கோவில்களை பாரத தேசமெங்கும் காண முடிகின்றது.  இமாலயத்தின் மேற்குப் பகுதியில் அமர்நாத், கேதார்நாத் மற்றும் நேபாளத்தில் பசுபதிநாத், தொடங்கி காசி, அவந்திகை உஜ்ஜயினி, சோமநாத், ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம், இராமேசுவரம் என கணக்கற்ற ஸ்தலங்களில் சிவாலயங்களையும், சிவ வழிபாட்டையும் பரவலாகக் காண முடிகின்றது. மற்றும் பாரதம் கடந்த இலங்கை, சாவகம், பாலி, சம்பா, கம்போடியா போன்ற பகுதிகளிலும் முன்னாளிலும் இன்றும் சிவாலயங்களையும், சிவசமய சின்னங்களையும் காண முடிகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !