பரமனும் கர்மமும்
ADDED :3750 days ago
பரம் பொருளுக்கும் கர்மத்திற்கு மிடையே உள்ள தொடர்பு என்ன? கர்மம் அறிவு இல்லாத ஜடவஸ்துவாக இருக்கிறது. அது ஒரு தொழிலாளியின் தொழில் கருவி போன்றது. தொழில் கருவி தானாக செயற்படாது. தொழிலாளி அதனைப் பயன்படுத்தும் போதுதான் அதன் பலன் தெரிகின்றது. ஆன்மாக்கள் அனுபவிக்கும் கர்மவினைகளே பரமேஸ்வரன் அல்ல. ஈஸ்வரன் பலனைக் கொடுக்கிறவனாக இருக்கிறான். கர்மம் அதற்கான சாதனமாகத் திகழ்கின்றது.