உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் சயனதிருக்கோலம்: பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் சயனதிருக்கோலம்: பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவையொட்டி நடந்த, ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயன திருக்கோல காட்சியளிக்கும் நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயில் ஆடிப்பூர விழாவின் 7ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிருஷ்ணர்கோயிலுக்கு வந்தடைந்தனர். இரவு 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ராஜீ பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்து, சயனத்திருக்கோலத்தில் காட்சியளித்தனர். இதை திரளான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !