எல்லையம்மன் கோவில் ஆடி உற்சவம்
ADDED :3397 days ago
கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி, எல்லையம்மன் கோவிலில், ஆடி அமாவாசை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ளது, எல்லையம்மன் கோவில். நேற்று முன்தினம், ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன், உள்புறப்பாடு சென்று ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.