உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்

பண்ருட்டி அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்

பண்ருட்டி: பண்ருட்டி அங்காளம்மன் கோவிலில் ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு உற்சவர் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பண்ருட்டி சென்னை சாலை ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆடிமாத  அமாவாசையை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து, பகல் 11:00  மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம்: பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி, சிறப்பு  திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. பாமா ருக்குமணி சமேதரராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கம்மாபுரம்: அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஆடி  அமாவாசையையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5:00 மணியளவில்  அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !