உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் திருப்பதி கோவிலில் புரட்டாசி சனி கருடசேவை

தென் திருப்பதி கோவிலில் புரட்டாசி சனி கருடசேவை

திருநெல்வேலி : மேல திருவேங்கடநாதபுரம் "தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு கருடசேவை நடக்கிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள், கருடசேவை நடக்கும். நெல்லை டவுனில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் மேல திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இக்கோவில் ஒரு பிரார்த்தனை தலம். திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டிய நேர்ச்சை, காணிக்கைகளை இக்கோவிலில் மக்கள் செலுத்துவர். "தென் திருப்பதி என இக்கோவில் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை நடக்கும். மூலவர் வெங்கடாசலபதி சுவாமி தரிசனத்திற்கும், இரவு சுவாமி கருட வாகன வீதியுலா காட்சியை காணவும் சுற்றுப்பகுதி மக்கள் கோவிலுக்கு திரண்டு வருவர். சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளி அலங்கார சப்பரத்தில் படிசேவை செய்வது பக்தர்களை பரவசப்படுத்தும். இந்த ஆண்டு முதல் சனி கருடசேவை 24ம்தேதி நடக்கிறது. புரட்டாசி சனியை முன்னிட்டு அக்டோபர் 1, 8, 15ம்தேதிகளில் கருடசேவை நடக்கிறது. இதையொட்டி நெல்லையில் இருந்து கோவிலுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ராமகிருஷ்ணன், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !