உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முண்டியம்பாக்கத்தில் குரு பெயர்ச்சி வேள்வி

முண்டியம்பாக்கத்தில் குரு பெயர்ச்சி வேள்வி

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை வளாகத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு குருபெயர்ச்சி சிறப்பு வேள்வி  நடந்தது.  முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையில் செல்வ வினாயகர் கோவில் வளாகத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு  குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, கணபதி, தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும்  சிறப்பு வேள்வி நடந்தது. கணபதி ேஹாமத்துடன் தொடங்கிய சிறப்பு யாக பூஜை நடந்தது. இரவு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு  அபிஷேகம்  செய்தனர்.  முண்டியம்பாக்கம் கண்ணன் குருக்கள்  தலைமையில்  பனையபுரம்  கணேசன் குருக்கள் வேள்வி பூஜைகளை  செய்தார்.  ராஜ் ஸ்ரீ சர்க்கரை உப தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆலை பொதுமேலாளர்கள், ஊழியர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !