அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது: பக்தர்கள் அதிர்ச்சி!
ADDED :3398 days ago
ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம் அருகே கடல் திடீரென்று உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று காலை முதலே அக்னி தீர்த்த கடற்கரை பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் கடற்கரை தெற்கு பகுதியில் திடீரென்று கடல் உள்வாங்கியது. இதனால் 100 மீட்டர் துாரம் வரை கடலால் மூழ்கடிக்கப்பட்ட பச்சைநிற பாசிகள் படந்த தரை வெளியே தெரிந்தது. மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரைதட்டியது. இந்த திடீர் நிகழ்வு கூடிநின்ற பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. சுனாமிக்கு பின் இதுபோன்று அடிக்கடி கடல் உள்வாங்குவதாகவும், சிறிது நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.