உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிநேகவல்லிதாயார் குதிரை, கமலம், அன்னம், ரிஷபம் போன்ற பல வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சர்வ அலங்காரத்துடன் சிநேகவல்லிதாயார் தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமநாதபுரம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன், செயல்அலுவலர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று தீர்த்தோல்ஸவம், நாளை அம்பாள் தவசு கோலத்தில் காட்சியளிப்பார். ஆக.7ல் திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !