உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பூர விழா கொண்டாட்டம் திருவள்ளூர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடிப்பூர விழா கொண்டாட்டம் திருவள்ளூர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

திருவள்ளூர்: ஆடி மாத மூன்றாவது வெள்ளி மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருவள்ளூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு,  (5.8.16) வெள்ளிக்கிழமை காலை, 9:30 மணிக்கு ஆண்டாளுக்கு  திருமஞ்சனமும், மாலை உற்சவருடன் ஆண்டாள  நான்கு வீதி புறப்பாடும் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்பட்டது. திருவள்ளூர், சத்திய மூர்த்தி தெருவில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருமஞ்சனமும் சாற்று முறையும் நடந்தது. பூங்கா நகரில் உள்ள சிவ – விஷ்ணு கோவிலில், பூங்குழலி அம்மனுக்கும்,  பத்மாவதி தாயாருக்கும் வளையல்கள் அணிவிக்கப்பட்டு ஆராதனை நடந்தது. மாலை, 108 திருவிளக்கு பூஜை, திருத்தேர் உலா நடந்தது.

திருவள்ளூர் ஜெயாநகர் விஸ்தரிப்பு, வல்லப கணபதி கோவிலில்,  துர்க்கை அம்மனுக்கு கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து அம்மனை பெண்கள் வழிபட்டனர். தீர்த்தீஸ்வரர் கோவிலில்,  திரிபுர சுந்தரி, திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில் தங்காதலி அம்மனுக்கு, வளையல்  அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஐவேலி அகரம் தேவி சக்திபீடத்தில் மகா பிரத்யங்கரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. புதிய திருப்பாச்சூர் காமேஸ்வர்  உடனுறை லலிதாம்பிகை கோவிலில், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோவில், பெரியகுப்பம் மூங்காத்தம்மன் கோவில் உட்பட நகரில்  உள்ள அம்மன்  கோவில்களில் பெண்கள் கூட்டம்  அலை மோதியது. அதே போல், திருமழிசை ஜெகநாதர் பெருமாள் கோவில், பொன்னேரி வட்டம், பஞ்சேஷ்டி அடுத்த ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !