உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி அஷ்ட புஜ துர்க்கைக்கு பால்குட ஊர்வலம்

விக்கிரவாண்டி அஷ்ட புஜ துர்க்கைக்கு பால்குட ஊர்வலம்

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குட ஊர்வலம் நடந்தது.

விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு ஆடி மூன்றாம் வெள்ளி மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. இதைமுன்னிட்டு,  (5.8.16) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சிவன்கோவிலிலிருந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன் தலைமையில் 108 பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலம் வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் துர்க்கையம்மனுக்கு சக்திசாமிகள் பால் அபிஷேகம் செய்தார்.பின்னர் துர்க்கைஅம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை நடந்தது. பூஜைகளை பாபு குருக்கள் செய்தார். ஜோதிடர் கமலக்கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி கருணாகரன் , மற்றும் உபயதாரர்கள் முன்னின்று பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !