முடக்கு மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா
புதுச்சேரி: கோவிந்தசாலை ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவிலில்ஆடிப்பூர தேர் திருவிழா (5.8.16) வெள்ளிக்கிழமை நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் ஆலயத்தின் 18ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 2ம் தேதி சக்தி கரகம் புறப் படுதல் மற்றும் சாகை வார்த்தல் நடந்தது. 3ம் தேதி அம்மன் காவடி அபிஷேகம், அம்மன் வீதி உலா காட்சி நடந்தது. 4ம் தேதி அம்மனுக்கு மஹா அபிஷேகம் மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேர் திருவிழா (5.8.16) வெள்ளிக்கிழமை காலை நடந்தது. இதையொட்டி (5.8.16) வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் அலங்கரித்த தேரில் வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார். தி.மு.க., நிர்வாகிகள் மாறன், அன்பு மற்றும் கோவில் நிர்வாகிகள் முத்தையா, மணி உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.