வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நவகன்னி பூஜை
ADDED :3374 days ago
வாலாஜாபேட்டை: தன்வந்திரி பீடத்தில் நடந்த நவகன்னி பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டனர். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், ஆடி மூன்றாம் வெள்ளி பூஜை, நவகன்னி பூஜை மற்றும் 11ம் ஆண்டு கூழ் வார்க்கும் விழா நடந்தது.
முரளிதர ஸ்வாமிகள் நவகன்னிமார்களுக்கும், முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் காளி அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து கூழ் வார்க்கும் விழா நடந்தது. நோய்கள் வராமல் தடுக்கவும். மக்களுக்கு அம்மை போடாமல் இருக்கவும், மரண பயத்தை போக்கவும் அன்னபூரணிக்கு அன்னப்படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.