ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை: கோவில்களில் கூழ் ஊற்றி வழிபாடு
ADDED :3366 days ago
ஈரோடு: ஈரோட்டில், ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, அம்மன் கோவில்களில் பெண்கள் கூழ் ஊற்றி வழிபட்டனர்.
மூன்றாவது ஆடி வெள்ளியை ஒட்டி ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், நடு மாரியம்மன், கொங்காலம்மன், கோட்டை பத்ரகாளியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், சுக்கரமணியவலசு மாரியம்மன், வெட்டுகாட்டு வலசு மாரியம்மன், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் வருணாம்பிகை அம்மன் மற்றும் தேவி கருமாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெரிய மாரியம்மன் மலர் அலங்காரத்திலும், கோட்டை பத்ர காளியம்மன் வெள்ளி கவச அலங்காரத்திலும், சுக்ரமணிய வலசு மாரியம்மன் காய்கனி அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் திரளாக காணப்பட்டது. பல கோவில்களில் பக்தர்களுக்கு, ராகி கூழ் வழங்கப்பட்டது.