நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் ஆக.,14 ல் நாத உற்சவ விழா
ADDED :3366 days ago
கரூர்: நெரூர், சுயம்பு அக்னீஸ்வரர் கோவிலில் ஆக.,14 ம் தேதி நாத உற்சவ விழா நடக்கிறது.
நெரூர் சவுந்தர நாயகி உடனுறை, அக்னீஸ்வரர் கோவிலில், ஏழாம் ஆண்டு நாத உற்சவ விழா ஆக.,14 ம் தேதி நடக்கிறது. காலை, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, 8 மணிக்கு சாய் சங்கீதாலயா இசைப்பள்ளி மாணவிகளின் வீணை பக்தி இசைக்கச்சேரி, காலை, 10 மணிக்கு பன்னிரு திருமுறை இசைக்கச்சேரி நடக்கிறது. மதியம், 2 மணிக்கு தேவாரம் மற்றும் திருப்புகழ் இசைக்கச்சேரி, மாலை 5 மணிக்கு 108 தவில், 108 நாதஸ்வரம் கலைஞர்களின் நாத உற்சவம் துவக்கம், தொடர்ந்து அக்னீஸ்வரர், சவுந்தர்ய நாயகி, சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடக்கிறது.