வடமதுரை முத்தாலம்மன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :5 hours ago
வடமதுரை; வடமதுரை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்த நிலையில், 48 நாட்கள் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று மண்டல பூஜையில் யாக வேள்வி பூஜை நடந்தது. வடமதுரை முரளி சிவாச்சாரியார், நாராயணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தினர். அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.