ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் அதிகார நந்தி உற்சவம்
ADDED :3358 days ago
திருவல்லிக்கேணி: எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில், ஆடி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அதிகார நந்தி வாகனத்தில் சிவனும் பார்வதியும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தனர். சென்னை, திருவல்லிக்கேணி எல்லையம்மன் ரேணுகா பரமேஸ்வரி திருக்கோவிலில், ஆடி மாத பிரம்மோற்சம், 4ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் சிறப்பாக நேற்று, நந்தி வாகனத்தில் சிவனும் பார்வதியும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருவீதி உலாவின் போது, தெருவில் கூடியிருந்த பக்தர்கள் சுவாமிக்கு பூ, வாழை, வெற்றிலை பாக்கு வைத்து படைத்தனர். இரவு, தொட்டி உற்வசம் நடந்தது. இன்று இரவு நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.