கண்டாச்சிபுரத்தில் கஞ்சிக் கலய ஊர்வலம்
ADDED :3356 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக் கலய ஊர்வலம் நடந்தது. கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நேற்று காலை 10 மணி அளவில் சக்திகொடியேற்றம் மற்றும் கூட்டு வழிபாடு நடந்தது. காலை 11மணி அளவில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி உருவப் படத்துடன்,கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. இதில் ராமநாதீஸ்வரர் கோவில் பஞ்சவாத்தியக் குழுவினர் உட்பட ஏராளமான பெண்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மன்ற நிர்வாகி அருள்ஜோதி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.