ஞானவினாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3354 days ago
கிள்ளை: முழுக்குத்துறையில் ஞானவினாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கிள்ளை அருகே முழுக்குத்துறையில் புதிதாக கட்டப்பட்ட ஞானவினாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் மாலை துவங்கியது. நேற்று அதிகாலை அனுக்ஞை மற்றும் கணபதி ஹோமத்துடன், பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு புனித நீர் கலசம் புறப்பாடாகி, கலசகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.