உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பண்ண சுவாமிக்கு வீச்சரிவாள் பிரதிஷ்டை

கருப்பண்ண சுவாமிக்கு வீச்சரிவாள் பிரதிஷ்டை

சாயல்குடி: சாயல்குடி அருகே கூரான்கோட்டையில் <பழமை வாய்ந்த தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள கருப்பண்ண சுவாமிக்கு நேர்த்திக்கடனாக பிள்ளையார்குளத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 22 அடி உயரம் கொண்ட வீச்சரிவாள் ஒன்றை நேர்த்திகடனாக வழங்கியுள்ளார். இவை கோயில் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பெண்கள் பொங்கலிட்டு முனீஸ்வரரை வழிபட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !