உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ணவள்ளி அம்மன் திருக்கல்யாணம்

சொர்ணவள்ளி அம்மன் திருக்கல்யாணம்

காளையார்கோவில்: காளையார்கோவில் சொர்ணவள்ளி அம்மன் கோயில் ஆடிப்பூர உற்சவ விழா ஜூலை 27 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. நேற்று காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 11 மணிக்கு சொர்ண காளீஸ்வரர் காசியாத்திரை நிகழ்வு நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமி, அம்பாள் பொன்னுஞ்சலில் எழுந்தருளினர். பகல் 1:30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. காளீஸ்வரக் குருக்கள் தலைமையிலான குழுவினர் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்களுக்கு திருமாங்கலிய பிரசாதம் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டை தேவஸ்தான நிர்வாகம், மற்றும் கிராமமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !