உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகி அம்மன் கோவிலில் செடல் உற்சவம்

பெரியநாயகி அம்மன் கோவிலில் செடல் உற்சவம்

புதுச்சத்திரம்: பெரியக்குப்பம் பெரியநாயகி அம்மன் கோவிலில் செடல் உற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  தொடர்ந்து 29ம் தேதி முதல் 4ம் தேதி வரை தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. செடல் உற்சவம் கடந்த 5ம் தேதி நடந்தது.  விழாவையொட்டி அன்று காலை 8:00 மணிக்கு பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு ஜலம்  திரட்டுதலும், 5:00 மணிக்கு செடல் உற்சவமும் நடந்தது.  6ம் தேதி கொடி இறக்குதலும், நேற்று (7ம் தேதி) சாகை வார்த்தல், மஞ்சள் நீர்  விளையாட்டு விழா நடந்தது. இதேபோன்று, புதுச்சத்திரம் ரேணுகாம்பிகை கோவிலில் கடந்த 5ம் தேதி மதியம் 3:00 மணிக்கு  காத்தவராயன் கழுகுமரம் ஏறுதலும், மாலை செடல் உற்சவமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !