உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிழக்கு ஆதிமாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

கிழக்கு ஆதிமாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், கிழக்கு ஆதிமாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, நேற்று காலை, 10 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம், 12 மணிக்கு, அம்மனுக்கு கூழ் படைத்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், பொங்கல் வைத்தனர். இரவு, 7 மணிக்கு, சுவாமி திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !