தர்மபுரி மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :3348 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அமுதம் காலனி, இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று (8ம் தேதி) அம்மனுக்கு கரகம் எடுத்தலும், நாளை அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், வரும், 10ம் தேதி காலை மாவிளக்கு எடுத்தலும்,மாலை அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. 11ம் தேதி பொங்கல் வைத்தலும், 12ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. இதேபோல், இலக்கியம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.