உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளுக்காணி மாரியம்மன் கோவில் திருவிழா

துளுக்காணி மாரியம்மன் கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், துளுக்காணி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள துளுக்காணி மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து அம்மனை தொட்டிலில் உட்கார வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நாளை (9ம் தேதி) மதியம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடக்கிறது. 10ம் தேதி காலை, 9 மணிக்கு, அம்மன் அலங்கார ஊர்வலமும், மாலை, 4 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !