உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தம்பிக்கலை அய்யன் கோவிலில் பொங்கல் விழா

தம்பிக்கலை அய்யன் கோவிலில் பொங்கல் விழா

ஈரோடு: விஷக்கடி, பாம்புக்கடி, தோல் வியாதி, அலர்ஜி, அரிப்பு நோய்களுக்கு பிரசித்தி பெற்ற தம்பிக்கலை அய்யன் கோவில், ஈரோடு அருகே சென்னிமலை சாலையில், முத்தம்பாளையத்தில் உள்ளது. இக்கோவில் விழா, நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இன்று (8ம் தேதி) மாலை, 5 மணிக்கு, காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (9ம் தேதி) காலை, 5 மணி முதல் பொங்கல் விழா நடக்கிறது. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !