உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவருள் திருவருள் குறித்து விளக்கம்!

குருவருள் திருவருள் குறித்து விளக்கம்!

மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் மரபு இந்து மதத்தின் உயர்ந்த கருத்தாகும். தாய் காட்டி தந்தையை அறிகிறோம். தந்தை காட்டி குருவை அறிகிறோம். தாயும், தந்தையும் ரத்த சம்பந்த உறவுகள். ஆனால் இதற்கு அப்பாற்பட்டு சீடனாக நம்மை ஏற்கும் குருநாதரே நமக்கு தெய்வத்தை உணர வைக்கிறார். போராட்டமான இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டுகிறார். ஆன்மபலத்தை நம்முள் உருவாக்குகிறார். இறையருளை திருவருள் என்கிறோம். அதைப்பெற நம்மை செம்மைப்படுத்துபவர் குருநாதர். அவர் காட்டும் வழிமுறையே குருவருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !